என் கலந்த உணர்வுகள்
என்னை அந்த தங்க சுரங்கத்தின்
வெளியே கொண்டு வந்து விட்டிருப்பது
தவிர்க்க முடியாததாகிவிட்டது
என்னை இந்தியா அழைத்தது
இல்லை இல்லை
என் தாய் அழைத்தாள்
என்றால் உங்களுக்கு என்ன
எனக்கே கூட
ஆச்சரியமாகத் தான்
இருக்கிறது
நான் உரிமை எடுத்துக்கொள்ளக்
கூடிய உறவுகளுடன் எல்லாம்
நான் சமீப காலமாக வேண்டினேன்
தங்கள் வாக்கை வீண் செய்யாதீர்கள்
வாக்கு போடுங்கள் என்று
என்னிடம் வலையில் வந்த
சில தபால்கள் வாக்கை வீண் செய்ய
வேண்டாம் யாருக்கும் அதைப்
பெற தகுதி இல்லை என்றெல்லாம்
வந்த இந்த தபால்கள்
என்னை ரொம்பவும் பாதித்தன
நான் பல சமயம் வியந்ததுண்டு
இந்த விவாதங்களில் ஓங்கும்
குரல்களுக்கு சொந்தக்காரர்களில்
எவ்வளவு பேர் உண்மையில்
வாக்குச் சாவடி சென்று
தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி
வேட்பாளர்களில் ஒருவரின் மீது
நம்பிக்கை வைத்து வாக்குச்
செலுத்தப் போகிறார்கள் என்று?
ஆனால் உலக அறிவிலும்
நாட்டு நிலவரத்திலும்
அறிவார்ந்த இவர்கள்
யாருக்கும் வாக்கு செலுத்த
வேண்டாம் என்று ஒரு
உரத்த சிந்தனை பரப்புவார்கள்
என்று என்னால் கற்பனை
செய்து பார்த்திருக்க முடியவில்லை
நான் இந்த வலைக்கடிதத்துக்கு
என் உணர்ச்சி பூர்வமான ஒரு
பதிலை நம் முன்னோர்கள்
போராடிப் பெற்ற இந்த
வாக்கை நீங்கள் வீண் செய்து விடாதீர்கள்
உங்கள் வாக்கை செலுத்துவதுதான்
அதனை உயிர்த்யாகம் செய்து நமக்காக
போராடிப் பெற்ற
சுதந்திரப் போராட்ட
த்யாகிகளுக்கெல்லாம் நாம் செய்யக்கூடிய
மரியாதை
ஜாதி மதங்களைப் பார்க்காமல்
நற்பணியை சீர்தூக்கிப் பார்க்கத் தெரிந்த
நாம் எல்லாம் விலகுவதால்
தேசம் பிரிவதற்கு உதவும்
வாக்கு வங்கிகள் இன்னும் வளரத்தான்
செய்யும்
அது நாம் தேசத்துக்கு செய்யும்
நற்செயல் ஆகாது என்றெல்லாம்
என் கோரிக்கை உணர்ச்சிகள் பொங்கிட
வலை போனது!
இப்படி நான் எழுதுவதற்கு
ஒரு வாரம் முன்பு தான்
ஏதோ ஒரு தவறான உடல் பயிர்ச்சியாலோ
என்ன காரணத்தினாலோ
என் இடது முழங்கால்
முழுதும் இயங்காமல்
முரண்டு பண்ண
அலுவலகம் சென்று வருவதே
பெரிய சவால் ஆனது
இதோடு ஆன்லைன்
முன் பதிவும் கெட
நான் வாக்குக்காக போக
இருந்த என் பயணத்தை
ரத்து செய்தேன்
என்னைப் போலே
வெளி நாட்டின் மூலைகளில்
வாக்குப் போட முடியாமல்
தவிக்கும் லட்சோப லட்ச
இந்தியர்களை நினைத்து
எனக்கு நானே ஆறுதல்
சொல்லிக் கொண்டேன்
இதற்கு தீர்வு
பயணம் அல்ல
தேசமும் ஒவ்வொரு வாக்கும்
வீணாகாமல் பெறுவதற்கு
தேர்தல் ஆணையம்
ஏதாவது செய்யத்தான்
வேண்டும் என்று கூட நினைத்தேன்
மனைவியிடம் வரவில்லை
என்று கூட தெரிவித்தேன்
நான் சில மௌனங்களைப்
பற்றி எழுதி இருந்ததைப் போல்
என் ஊருக்கு உபதேசத்திற்கும்
என் வாக்குப் போடாத
வெளிநாட்டு வாசத்திற்கும்
இடையே
என்னைக் கேள்வி கேட்கிற
என்னை எனக்கே மீட்கிற
ஒரு மௌனம்
எனக்குக் கிடைத்தது
என்னை இந்திய அன்னை
நினைவூட்டி அழைத்தது போல்
இருந்தது
அம்மாவிடம் நான் வருவதை
சொன்ன பொழுது
அம்மா சொன்ன வார்த்தை
என் கலந்த உணர்வுகளுக்கு
உரை எழுதியது போல்
இருந்தது:
"இந்த முறை
இந்தியாவுடைய
குடிமகனாக வரேன்னு
சொல்லு"
அன்னை அறியாத பிள்ளை மனசா?
தமிழமிழ்தில் எழுத ஆரம்பித்து
நாளை முதல் முதலாய் ஒரு நாள்
நான் எழுத மாட்டேன்
ஆனால் என் சிந்தனை ஓட்டங்கள்
மேகங்களுக்கிடையே
தமிழமிழ்தின் பக்கத்திலேயே
சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும்
நானும் என் கலந்த உணர்வுகளும்
ஒருவரை ஒருவர் சுற்றி சுற்றி வருவது போல்!
ஞாயிறு, 10 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Such attempts by patriotic Indians have ensured a stable Government for India. God bless India!!
பதிலளிநீக்கு