ஞாயிறு, 3 மே, 2009

அட்சராப்யாஸம்

இந்த வலை ஸ்லேட்டு
எனக்குக்கிடைத்த
இந்த நாள் என் வாழ்வின்
ஒரு மகத்தான நாள்.

இந்த நாள் தான் நான்
வலையில்
தமிழில்
அட்சராப்யாசம்
செய்த நாள், இந்த பிஞ்சு
விரல்களை என்
தந்தை பின் புலத்திலிருந்து
இயக்கியது போல ஒரு
பிரமை
இப்போது தான் அவரது கன்னி முயற்சி
'செங்கரும்பின்' தலையங்கம்
ஒன்றை
அச்சகம் வரை கொடுத்து
அவரிடம் ஐம்பது பைசா
இனாம் பெற்றது போல் இருக்கிறது!

தமிழ் நதி என் வாழ்வில் கோடை கால
காவிரி போலே சுருங்கி விட்டாள் என்று
நான் வாடிப்போய் இருக்கும் பொழுது

என் கைகள் கூகிள் செய்து
மணல் தோண்ட,
கிடைத்தது தமிழமிழ்து.
கூகிள் தமிழை சொல்லிக்கொடுத்த
நண்பன் ராஜ்க்கு தமிழுள்ளவரையும் நன்றிக்
கடன் பட்டிருக்கிறேன்!


சாத்தமுது, கறியமுது என்றெல்லாம்
வைணவர்கள் குறிப்பிடும் உணவு வகைகள்
போல் அந்த திருக்கண்ணமுது போல் தமிழமிழ்து
தமிழ் என்றாலே அது அமிழ்தன்றோ?
அது என்ன தமிழ் அமிழ்து?

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
அமிழ்து ஆவது எங்கும் இல்லை!

அமிழ்து எது? அமிழ்து தமிழ்!
தமிழ் எது? தமிழ் அமிழ்து!

ஒவ்வொரு தினமும்
வலையில் வலம் வர
தமிழ் அன்னை தயை
புரிய வேண்டும்!

அன்புடன்,

தமிழ் அமிழ்து






































Y








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக