சனி, 9 மே, 2009

இரண்டாம் வகுப்பு என் முதல் வகுப்பு

இந்த பள்ளிகளின் நினைவலைகள்
என்னை நன்றாக சூழ்ந்து கொண்டு விட்டன
என் இரண்டாம் வகுப்பு தான்
எனக்கு முதல் வகுப்பு
எனக்கு இன்றும் ஆச்சரியமாக இருக்கிறது
ஒரு முழு வருஷம் எழுதப் படிக்கக்
கற்றுக் கொள்ளாதவன்
இரண்டாம் வகுப்பில் எப்படி
நன்றாகப் படித்தேன் என்று

ஸ்லேட்டு நிறைய
நான் எழுதத் தொடங்கியது எல்லாம்
இந்த இரண்டாவது வகுப்பில் தான்
என்னை ஒரு படிக்கும் சமூகத்தின்
அங்கமாக நான் உணர்ந்து கொண்ட
முதல் வருடம் அது

எங்கள் வாழ்க்கையில் இந்த ஒரு
மாற்றம் முக்கியமானதாக
இருந்தது
முதல் முறையாக வீட்டுக்கும்
பள்ளிக்கும் இடையில்
மோட்டார் வாகனங்கள்
போகும் சாலைகள் இந்த ஊரில் தான்
சமாளிக்கக் கிடைத்தன

துறையூர்
ஆயிரத்து தொளாயிரத்து அறுபதுகளில்
இன்றைய துறையூரை விட சிறியதுதான்
என்றாலும் சாலைகளும் வாகனங்களும்
பெருகிய ஒரு பரபரப்பான ஊராகத் தான்
இருந்தது

இந்த அறுபதுகளில்
அக்காவின் பிஞ்சு விரல்கள் தான்
எனக்கும் என் தம்பிகளுக்கும்
பாதுகாப்பு
இந்தப் பாதுகாப்பு நீடிப்பதற்காக
எங்கள் அக்கா எட்டாவது
வரை ஒரு ஆரம்பப் பள்ளியில்
படித்தது எங்கள் குடும்பத்தின்
த்யாக குணங்களையும்
தலைமை குணங்களையும்
ஒரு சேர பெண்கள்
பெற்றிருந்ததற்கான
அதன் பலன்களை நாங்கள்
(மகன்கள்) முழுதும்
பெற்றதற்கான எத்தனையோ
உதாரணங்களில் ஒன்று

என் பள்ளிப் பருவ நினைவுகள்
பல்கிப் பெருகுகின்றன

இந்த எழுத்துக்கள்
இப்போதைக்கு என் பள்ளிக்கூடங்களை
வகுப்புகளை தெரு விளையாட்டுக்களை
வலம் வருவது தவிர்க்க முடியாததாகிறது

நினைவுகள் காலத்தின்
சுரங்கத்துக்குள் சென்று விட்டால்
வெளியே வருவது சிரமம் தான்
அதுவும் அந்த சுரங்கம்
தங்கச் சுரங்கம் என்னும் போது

1 கருத்து:

  1. Boyhood is a wonderful period in one's life. Our womenfolk have in so small measure contributed to our very lives. Yhey have laid a solid foundation for our knowledge society. How very well you have brought out these aspects in your creative piece!!

    பதிலளிநீக்கு