நம் நாடு
பன் முகம் கொண்டது
பல மொழிகள்
இனங்கள்
இன்னும் எத்தனையோ
வேறுபாடுகள்
சுதந்திரம் உட்பட
அறுபத்தி இரண்டு
ஆண்டுகளில் நம்
சுதந்திரம்
ஒன்று நூறாகி ஆயிரமாகப்
பல்கிப் பெருகி விட்டது
நம் கொண்டாட்டம் ஒன்று போல
இருக்கலாம்
சுதந்திரங்கள் வேறு
எல்லோருக்கும் ஒரு தாகம்
கிடைப்பது ஒரே மாதிரியான
நீர் அல்லவே?
அது போலத்தான்
ஆளுக்கு ஒரு சுதந்திரம்
ஆணுக்கு ஒரு சுதந்திரம்
இன்றும் உண்டு
பெண்ணுக்கு வேறு ஒன்று உண்டு
ஆண்டான் அடிமை இன்றும் உண்டு
வெவ்வேறு சுதந்திரங்கள்
ஜாதி அடிப்படையில்
சுதந்திரங்கள்
பங்கீடுகள் வாக்கு
வங்கிகள் -
சுதந்திரங்கள் பல வகையாகப்
பிரித்துக்கொடுக்கப்பட்டிருப்பது
மறுக்க முடியாத
இனி மாற்ற முடியாத ஒரு
நிஜம்
இந்த சுதந்திரங்களின்
முன்னே
குடும்ப ஆதாரங்கள்
அசைய ஆரம்பித்து இருப்பதும்
இன்னொரு நிஜம்
ஒன்று பெற்றோர் தோள்களில்
உலவும் சுதந்திரம்
இன்னொன்று பெற்றோர்களின்
மதிப்பீடுகளை மறுதலிக்கும்
சுதந்திரம்
சுதந்திரங்கள்
ஆயிரக் கணக்கில்
நடம் ஆடும் இந்தியா
வீட்டுக்குள்
வந்தால்
அது ஒரு வகையான
கலாசார யுத்தம் தான்
பலர் தோற்றும்
கொண்டாடும்
சிலர் சுதந்திரங்களின்
ரங்கோலியால்
மற்றவர் துயரங்கள்
வண்ணங்கள் போல்
தோன்றும்
மகத்தான வாழ்வு தான்
ஆயினும்
நான் சுதந்திரம்
கொண்டாடுவேன்
எனக்கு தெரியும்
இன்று
பல ஏழைக் குடும்பங்களில்
ஒரு புது குதூகலம் உண்டு
நாடு முழுதும்
சாலைகள் எங்கெங்கும்
மூவண்ணக் கொடிகள்
விற்றதில் ஒரு
சின்ன சில்லறை சுதந்திரம்
பல குடும்பங்களுக்கும்
குழந்தைகளுக்கும் உண்டு
ஒரு நாள்
ஒரு பொழுது
இவர்கள் வாழ்வில்
அர்த்தம் கொடுத்தாலும்
இவை
போற்றப் படவேண்டியவையே
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக