உன் பாதச் சுவடுகளைப்
பார்த்ததும் பூரித்தேன்
எனக்கு ஆச்சர்யம் வர வேண்டும் என்று
சொல்லாமல் என்னைத் தேடி
வந்து போய் இருப்பாய் என்றும் யூகித்தேன்
உன் பாதச் சுவடுகளைத்
தொடர்ந்து உனக்கு
அதே ஆச்சர்யம் தர முடியும்
என்று யோசித்தேன்
கடற்கரை வரை வந்து சேர்ந்தேன்
ஓ, மழை கடலில், கரையில்
என் மேனி முழுதும்
நம் இருவரையும்
தொடர்ந்து வந்த இயற்கையை
எண்ணி மாய்ந்து போனேன்
உன் பாதச் சுவடுகள்
கலைந்ததில்
எனக்கு வீடு திரும்பத் தெரியவில்லை
சனி, 10 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக