தாயுமானேன்
என் மகளின்
புகைப் படத்தில்
என் அன்னையின்
இருபதுகளைக்
கண்டவுடன்
இந்தத் தந்தை
ஒரு
தாயுமானேன்
என் மகளின்
சுய கௌரவத்தில்
என் அன்னையின்
பிடிவாதத்தைக்
கண்டவுடன்
இந்தத் தந்தை
ஒரு
தாயுமானேன்
என் மகளின்
அறிவுரையில்
என் அன்னையின்
அறிவுரை
கேட்டதும்
இந்தத் தந்தை
ஒரு
தாயுமானேன்
என் மகளின்
சிக்கனத்தைக்
கண்டு
அதிசயித்து அதில்
என் அன்னையைக்
கண்டறிந்ததும்
இந்தத் தந்தை
ஒரு
தாயுமானேன்
தந்தை
என்பது
ஒன்றுமே இல்லை
என்று உணர்ந்த பின்
நான்
ஒரு தாயின்
உணர்வில்
உறைந்து
போனேன்
என் மகளின்
புகைப் படத்தில்
என் அன்னையின்
இருபதுகளைக்
கண்டவுடன்
இந்தத் தந்தை
ஒரு
தாயுமானேன்
என் மகளின்
சுய கௌரவத்தில்
என் அன்னையின்
பிடிவாதத்தைக்
கண்டவுடன்
இந்தத் தந்தை
ஒரு
தாயுமானேன்
என் மகளின்
அறிவுரையில்
என் அன்னையின்
அறிவுரை
கேட்டதும்
இந்தத் தந்தை
ஒரு
தாயுமானேன்
என் மகளின்
சிக்கனத்தைக்
கண்டு
அதிசயித்து அதில்
என் அன்னையைக்
கண்டறிந்ததும்
இந்தத் தந்தை
ஒரு
தாயுமானேன்
தந்தை
என்பது
ஒன்றுமே இல்லை
என்று உணர்ந்த பின்
நான்
ஒரு தாயின்
உணர்வில்
உறைந்து
போனேன்